# This data is in public domain
#Ref: http:/ www.thozhilnutpam.com
# தமிழ் மின்னியல் மின்னணுவியல் கணினியியல் சொல்லகராதி/
# TAMIL ELECTRICAL, ELECTRONICS & COMPUTER ENGINEERING GLOSSARY
>>மின்னியல்,மின்னணுவியல்,கணினியியல்
numeric - எண் வரிசை
3-phase circuit - மும்முனைச் சுற்று, முத்தறுவாய் சுற்று
8b10b encoding - எட்டுக்குப்பத்து குறியாக்கம் - dvb-asi, sas, sata, pci-express போன்ற பல செந்தரங்களில் பயனாகும் குறியாக்கம், இதில் கடிகை உட்பதிந்துள்ளது; துணுக்கோடை (bitstream) எட்டு துணுக்கு குறிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குறியும் பத்து துணுக்கு குறியாக 1 0 சமஎண்ணிக்கையாக அமையும்படி மாற்றப்படுகிதது
ac current - ஆடலோட்டம், மாறுதிசை மின்னோட்டம்
ac voltage - மாறுதிசை மின்னழுத்தம்
acoustic coupler - கேட்பொலிப் பிணைப்பி
acoustics - கேட்பொலியியல்
active device - செயல்படுச் சாதனம்
admittance - விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; g + j(bc-bl) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
active load - செயல்படு சுமை
aliasing, alias frequency - புனைவு, புனையலைவெண் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் போதுமற்ற மாதிரிவிகிதத்தால் உள்ளீடு குறிகையை (உதாரணமாக கேட்பொலி, ஒளிதோற்றம்) மறுமீட்கும்போது உயர் அலைவெண்களில் முதலிருந்த குறிகை (ஒலி, ஒளி வகையறா) தவறாக தாழ் அலைவெண்ணாக பெறும் நிலை
algorithm - படிமுறை
amplidyne - மிகைப்பி மின்னாக்கி
amplitude shift keying - வீச்சு பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சுகளாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
analog electronics - ஒப்புமை மின்னணுவியல், ஒப்புமையியல்
analysis - பகுப்பாய்வு
analyzer - பகுப்பி
and gate - உம்மை வாயில்
anisotropic antenna - ஒருதிசை அலைக்கம்பம்
anode - நேர்முனை
antenna - அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
antenna coupler - அலைக்கம்பப் பிணைப்பி - அலைக்கம்பம் மற்றும் செலுத்தி அல்லது பெறுவி இடையே அமையும் மின்மறுப்பு பொறுத்தும் (impedence matching) சாதனம்
apparent power - தோற்றத் திறன் - எதிர்வினை உறுப்பு (reactive element) கொண்ட மின்சுற்றில் செலவாகும் மின்திறன்; கண மின்னோட்டம் மற்றும் கண மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கு; p = vinst x iinst
argon - இலியன்
armature - மின்னகம்
arsenic - பிறாக்காண்டம்
attenuation, attenuator - மெலிப்பு, மெலிப்பி
atomic instruction - அணுநிலை ஆணை
auto-correlation - தன் ஒட்டுறவு - ஒரு குறிகையில் தன்னுடனையே உள்ள ஒட்டுறவு; இக்கெழு அக்குறிகையின் சுழல் தன்மையை பிரதிபலிக்கிறது
automatic gain control (agc) - தானியங்கு மிகைப்பு கட்டுப்பாடு - ஒரு மிகைப்பி அமைப்பு, இதில் தன் மிகைப்பை தேவைக்கேற்ப மாற்றி அதன் மீது வழங்கப்படும் உள்ளீடுகளின் வீச்சளவு வரம்புகளுக்கிடையே ஒரே வெளியீடு வீச்சளவை உற்பத்தி செய்யும்
auto pilot - தானோட்டி
auto router - தானியங்குத் திசைவி
average current - சராசரி ஓட்டம்
averager - சராசரிப்படுத்தி
axiom - அடிகோள்
azimuth - திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
balun (balanced-to-unbalanced transformer) - சமனிலாச்சமனி
bandpass filter - பட்டைவிடு வடிப்பி
bandstop filter - பட்டைத்தடை வடிப்பி
bandwidth - பட்டை அகலம்
battery - மின்கலம்
beacon (= aeronautical beacon) - சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
beam (of light, electrons etc.) - கற்றை
biasing - சாருகையிடுதல் - ஒரு திரிதடையத்தை (பொதுவாக மிகைப்பியாக) செயல்படுத்த, அதன் தளவாய் மீது ஒருதிசை மின்னழுத்தம் ஏற்படுத்துதல்
bias voltage - சாருகை மின்னழுத்தம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய் மீது ஏற்படுத்தப்படும் ஒருதிசை மின்னழுத்தம்
bias current - சாருகை மின்னோட்டம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய்-உமிழ்வாய் சந்தியில் பாயும் ஒருதிசை மின்னோட்டம்
binary - இருமம்
bit (data) - துணுக்கு (தரவு)
bit rate - துகள் வீதம்
blanking - மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace), கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
bootstrap, bootstrapping, bootstrap circuit - ஈடேற்று, ஈடேற்றம், ஈடேற்றுச் சுற்று - மாறுமின்னழுத்தத்திற்கு அதிகாக மின்மறுப்பு தரும் ஒரு வகை சாருகை முறை
broadband - அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை
broadside array (antenna) - முகமியக்க அணி (அலைக்கம்பம்)
bus (data) - பாட்டை (தரவு)
bromine - நெடியம்
bronze - வெண்கலம்
buffer, buffer amplifer - இடையகம், இடையக மிகைப்பி
buried via - மறைந்த வழிமம் - ஒரு சுற்றுப்பலகையில் இரு முகங்களை எட்டாத வழிமம்; இது ஒரு முகத்தை எட்டும் அல்லது உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும்
busy, busy state - வேலயாக, வேலையான நிலை
byte (= octet) - எண்ணெண்
 
cable - வடம்
cable modem- வடப் பண்பேற்றிறக்கி
cache memory - இடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
calculator - கணிப்பான்
calculus - நுண்கணிதம்
camcorder - நிகழ்பதிவி
capacitor - மின்தேக்கி, கொண்மி
capacitive reactance - கொண்ம எதிர்வினைப்பு
capillary action - புழை இயக்கம்
carrier signal - சுமப்பி குறிகை
cartridge - பொதியுறை
cascade - ஓடையிணைப்பு
catalyst - வினையூக்கி
cathode - எதிர்முனை
cdrom - படிப்பு குறுவட்டு
cd read write - எழுதுப்படிப்புக் குறுவட்டு
cd recordable - பதிவுக் குறுவட்டு
cell phone (mobile phone) - கைபேசி (நகர்பேசி)
centre of gravity - ஈர்ப்பு மையம்
centre of mass - பொருண்மை மையம்
charecteristic - சிறப்பியல்பு
charecteristic impedence - சிறப்பு மின்மறுப்பு - ஒரு செலுத்துதடத்தில் ஏதேனும் இருப்பிடத்தின் மின்னழுத்தம்-மின்னோட்டம் விகிதம்
charge - மின்னூட்டு
charger - மின்னூட்டி
chassis ground - சட்டநிலம்
chipset - சில்லுத்தொகுதி
chord (in a circle) - நாண்
chord (music) - பன்னிசை
chroma / chrominance - நிறப்பொலிவு
circumference - பரிதி
clock signal - கடிகாரக் குறிகை
clock buffer - கடிகார இடையகம்
coax(ial) cable - ஓரச்சு வடம்
coaxial lenses - ஓரச்சு வில்லைகள்
cobalt - மென்வெள்ளி
codec - புரிப்பு
collector (transistor) - ஏற்புவாய்
combination, combination group - சேர்வு, சேர்வுக் குலம்
composite video - கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (luma), நிறமை (chroma) மற்றும் நேரவிவரம் (timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
computer - கணிப்பொறி, கணிணி
concave lens - குழிவில்லை
commutator - திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
computer - கணிப்பொறி, கணிணி
concave mirror - குழியாடி
conductance - கடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; g = i/v என்கிற மதிப்புடையது, அதாவது தடையத்தின் தலைகீழ்
cone - கூம்பு
configurable programmable logic device (cpld) - உள்ளமை நிரல்படு தருக்கச் சாதனம்
configuration - உள்ளமைவு
constant - மாறா, மாறிலி
continuos function - தொடர்ச்சியுள்ள சார்வு
convex lens - குவிவில்லை
convex mirror - குவியாடி
convolution - சுருளல்
coordinate - ஆயம்
correlation - ஒட்டுறவு
crystal - படிகம்
crystal oscillator - படிக அலைவி/அலைப்பி
cube - கன சதுரம்
current - மின்னோட்ட்ம், ஓட்டம்
cyclotron - சுழற்சியலைவி
 
dc current - நேரோட்டம்
data - தரவு
datasheet - தரவுத்தாள்
dc current - நேரோட்டம், ஒருதிசை மின்னோட்டம்
dc voltage - ஒருதிசை மின்னழுத்தம்
decode, decoding, decoder - குறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி
decimate, decimation - வீதக்குறை, வீதக்குறைவு - மாதிரித் தரவுகளை அதிக வீதத்திலிருந்து குறைந்த வீதத்திற்கு மாற்றுதல்; இடையுள்ள மாதிரிகள் விடப்படுகின்றன
decrypt - மறைவிலக்கு
demodulation - பண்பிறக்கம்
descrambling - கலர்விலக்கம்
detector - உணர்வி
diac (diode for ac) - மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்
diameter - விட்டம்
differential, differentiation, differentiator - வகையீட்டு, வகையீட்டல், வகையீட்டி
diffraction - அலைவளைவு
diffraction grating - அலைவளைவுக் கீற்றணி
diode - இருமுனையம்
directional antenna - திசைவு அலைக்கம்பம்
directional coupler - திசைவுப் பிணைப்பி
discreet values - தனித்த அளவுகள்
discharge (electric) - மின்னிறக்கம்
discriminator - பிரித்துணர்வி
distorsion - உருக்குலைவு
disc - வட்டு
dish antenna - அலைக்கம்பா
double-stub (impedence) matching - இருமுளை (மின் மறுப்புப்) பொறுத்தம்
driver (software) - இயக்கமென்பொருள்
dynamo - மின்னாக்கி
 
earth ground - புவி நிலம்
earthing - புவியிடுதல்
earth wire - புவிக் கம்பி
eddy current - சுழலோட்டம்
egress - வெளிவாய்
electric field - மின்புலம்
electricity - மின்சாரம்
electrocardiograph - மின் இதயத்துடிப்பு வரைவி
electron - எதிர்மின்னி
electrode - மின்வாய்
electromagnetic interference (emi) - மின்காந்த இடையீடு
electromagnetic wave - மின்காந்த அலை
electromagnetics - மின்காந்தவியல்
electrostatics - நிலைமின்னியல்
electrostatic discharge (esd) - நிலைமின்னிறக்கம் - இரு மின்னூட்டமுடைய பொருட்கள் அருகில் நெருங்கும்போது ஏற்படும் மின்னிறக்கம்
electrostatic sensitive (=esd sensitive) - நிலைமின்பாதிக்கப்படத்தக்க(து)
electron - எதிர்மின்னி
electronics - மின்னணுவியல்
element - தனிமம்
emitter - உமிழ்வாய்
emulation - போன்மம்
end-fire array (antenna) - முனையியக்க அணி (அலைக்கம்பம்)
engine - பொறி
entity - உருபொருள்
elevation - உயர்வு ரேகை
ethernet - தூயவெளியம், தூயவெளி வலை
ethernet card - தூயவெளி அட்டை
 
fabrication - கட்டுருவாக்கம்
factorial - தொடர்பெருக்கு
fall time - விழுநேரம்
falling edge - விழுவிளிம்பு
fan-in - வீச்சு சுருக்கம்
fan out - வீச்சு விரிப்பு
far-field region - தொலைபுல மண்டலம்
fiducial - நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
feed horn - அலையூட்டுக் குழல்
fetch cycle - கொணர் சுழர்ச்சி
fibre-optic cable - ஒளியிழைவடம்
fidelity - மெய்நிலை
field - புலம்
field programmable gate array - களம் நிரல்படு வாயிலணி
field effect transistor (fet) - புலவிளைவுத் திரிதடையம்
file - கோப்பு
file allocation table (fat) - கோப்பு பிரிப்பு அட்டவணை
finline - துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள்
finite impulse response (=fir) filter - முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை
flat panel display (fpd) - தட்டைப் பலகக் காட்சி
flow chart - பாய்வுப்படம்
forward bias - முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
frequency hopping - அலைவெண் துள்ளல்
frequency modulation - அலைவெண் பண்பேற்றம்
frequency shift keying - அலைவெண் பெயர்வு இணைத்தல்
full adder - முழுக்கூட்டி
function (mathematical) - சார்பு
function (subroutine, subprogram) - துணைநிரல்
functionality - செயல்கூறு
fuse - உருகி
fuzzy logic - இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்
 
gain - பெருக்கம்
galvanometer - கல்வனோமானி
gallium - மென்தங்கம்
gate - வாயில்
gate (in f.e.t.) - வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
gate array - வாயிலணி, வாயில் அணி
gateway - நுழைவாயில்
gang, ganging - கூட்டியங்கு, கூட்டியங்குதல்
general purpose register - பொதுப்பயன் பதிவகம்
generator - மின்னியற்றி
glitch - தடுமாற்றம்
global positioning system - உலக இடம் காட்டும் அமைப்பு
grating - கீற்றணி
grid (electric) - மின்தொகுப்பு
grounding - நிலமிடுதல்
ground current - நிலஓட்டம்
ground plane - நிலத் தளம்
ground wave - நிலஅலை
ground wire - நிலக் கம்பி
 
half adder - அரைக்கூட்டி
halogen - உப்பீனி
hard disk - நிலைவட்டு
hardware - வன்பொருள்
harmonic(s) - இசையம்(ங்கள்)
helical antenna - சுருள் அலைக்கம்பம்
helium - எல்லியம்
hetrodyne, hetrodyning - கலக்கிப்பிரி, கலக்கிப்பிரிப்பு - கலப்பி மற்றும் உள்ளிட அலைவி ஆகியவை கொண்டு வானலையை இடையலை ஆக்குதல் அல்லது எதிர்மாறாக
hex number - பதின்அறும எண்
hexode - அறுமுனையம்
high pass filter - உயர்பட்டை வடிப்பி
holography - ஒளிப்படவியல்
homogenious - ஒருபடித்தான
horizontal line - கிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு
horizontally polarized wave - கிடை முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் கிடைதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
host - விருந்தோம்பி
hue - வண்ணச்சாயல்
hub - குவியன்
hyperbola - அதிபரவளையம்
ideal - கருதியல்
idle, idle state - பயனிலான, பயனில் நிலை
identity - முற்றொருமை
impedence - மறுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் எதிர்ப்புத் தன்மை; விடுப்பின் தலைகீழ்; இது தடையம் மற்றும் எதிர்வினைப்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; z = r + j(xl-xc) மதிப்பு கொண்டுள்ளது
impedence matching - மின் எதிர்ப்பு பொறுத்தம்
impulse - கணத்தாக்கம்
impulse response - கணத்தாக்க மறுமொழி
incidence (light) - ஒளிப்படுகை
inderminate - தேரா, தேரப்பெறாத
indium - அவுரியம்
inductive reactance - தூண்ட எதிர்வினைப்பு
inertia - சடத்துவம், ஜடத்துவம்
infinite impulse response (=iir) filter - முடிவற்ற கணத்தாக்க மறுமொழி வடிப்பி - பின்னூட்டு கொண்ட இலக்க வடிப்பி; இவை கொடுத்த மறுமொழியை செயல்படுத்த சிக்கனமானவை
infinity - முடிவிலி
ingress - உள்வாய்
initiator - துவக்கி
initialization - முன்னமைவு
instrument landing system - தரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
insulate, insulation - மின்காப்பிடுதல், மின்காப்பு
insulated - மின்காப்பிடப்பட்ட(து)
intelligence - நுண்ணறிவு
integer - முழு எண்
integral, integration, integrator - தொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி
interlace - தொடர்பின்னல்
interlaced scanning - பின்னிய துருவுதல்
intermediate frequency (if) - இடைநிலை அலைவெண், இடையலை
interference - இடையீடு
interpolate, interpolation (dsp) - வீதமேற்று, வீதமேற்றம் - மாதிரித் தரவுகளை குறைந்த வீதத்திலிருந்து அதிக வீதத்திற்கு மாற்றுதல்; புதிதாக செருகப்படும் தரவுகள் சராசரி அல்லது பூச்சியமாக கருதப்படுகின்றன
interpolate, interpolation (statistics) - இடைச்செருகு, இடைச்செருகல்
interrupt - குறுக்கீடு
invariant, invariance - மாற்றமுறாதது, மாற்றமுறாமை
inverter - மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
inverse square law - எதிர் வர்க்க விதி
involute, involution - சுருட்சிவரை, சுருட்சி
isolation - தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
iridium - உறுதியம்
irregularity - ஒழுங்கின்மை
iron loss - இறும்பு இழப்பு
isa - industry standard architecture - தொழிலக நெறிக் கட்டமைப்பு
 
jacket - உறை
jam - நெரிசல்
jaw - தாடை
job - பணி
jump - தாவு
junction - சந்தி
junction diode - சந்திப்பு இருமுனையம்
junction transistor - சந்திப்புத் திரிதடையம்
joystick - இயக்குப்பிடி
 
key bounce - விசைத் துள்ளல்
keyboard (computer, typewriter) - விசைப்பலகை
keyboard (music) - இசைப்பலகை
key bounce - சாவித் துள்ளல், விசைத் துள்ளல்
key way - சாவித் துளை
kinetic energy - இயக்க ஆற்றல்
klystron, klyston oscillator - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி/கற்றையலைப்பி - நுண்ணலைகளை எற்படுத்தும் ஒரு சாதனம்
knob - குமிழ்
knee point - திருப்பும் முனை
keying - இணைத்தல்
krypton - மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
 
laser - ஊடொளி
laser diode - ஊடொளி இருமுனையம்
latch - தாழ்ப்பாள்
latency - சுணக்கம்
latent heat - உள்ளுறை வெப்பம்
lattice - உருபொருள்
layout (ic, pcb) - மனையமைவு
light emitting diode - ஒளி உமிழ் இருமுனையம்
linear (particle) accelerator - நேரியல் (துகள்) முடுக்கி
linear ic - நேரியல் ஒருங்கிணைச்சுற்று
linker - தொடுப்பி
liquid crystal display (lcd) - திரவப் படிகக் காட்சி
lithium - மென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
load, load (v.), loading - சுமை, சுமைக்கொடு, சுமைக்கொடுத்தல்
locus - நியமாப்பாதை
log in - புகுபதிகை
log out - விடுபதிகை
logic - தருக்கம், ஏரணம்
logic element- தருக்கத் தனிமம்
logarithm - மடக்கை
logic design - தருக்க வடிவமைப்பு
logic lock region - தருக்கம் அடைப்பு மண்டலம்
longitude - நெட்டாங்கு
low drop out regulator - தாழ்வீழ்ச்சி சீர்ப்படுத்தி, தாழ்வீழ்ச்சி சீர்ப்பி
low pass filter - தாழ்பட்டை வடிப்பி
low noise - தாழ் இரைச்சல்
low noise block downconverter (lnb) - தாழ்விறைச்சல் பட்டை கீழ்மாற்றி (பட்டைமாற்றி) - செயற்கைக்கோள் குறிகையை l-பட்டை இடையலையாக மாற்றும் சாதனம்
luminance - ஒளிர்மை
lumped circuit elements - திரண்ட சுற்றுருப்புக்கள் - வானலை குறிகைப்பாதையில் போலி சுற்றுருப்புக்கள் - மின்தடையம், மின்தேக்கம் மற்றும் மின்தூண்டல் ஆகியவற்றை கருதியல் மின்தடங்களுடன் (ideal conductors) தனத்தனியான சுற்றுருப்புக்களாக பிரதிபலிக்க இயலும்; இச்சுற்றுருப்புக்கள் திரண்ட சுற்றுருப்புகள் எனப்படுகின்றன
 
macro - குறுநிரல்
magnetograph - காந்தவரைவி
magnetometer - காந்தமானி
magnetron - காந்த அலைவி
magnification - உருப்பெருக்கம்
magnitude - வீச்சளவு
mantissa - அடிஎண்
mass - நிறை
master clock - முதன்மைக் கடிகாரம்
mass storage - திரள் சேமிப்பகம்
math coprocessor - கணித இணைச்செயலி
matrix - அணி
memory address - நினைவக முகவரி
memory allocation - நினைவக ஒதுக்கீடு
metal layer - உலோக அடுக்கு
metallization - உலோகப்பூசு, உலோகப்பூசல்
microphone - ஒலிவாங்கி
microstrip - நுண்கீற்று - மின்சுற்றுப்பலகைகளில் வெளி அடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள்
microwave oven - நுண்ணலை அடுப்பு
mixer - கலப்பி
model - மாதிரியுரு
modem - இணக்கி
modulation index - பண்பேற்ற குறியெண்
modulator - பண்பேற்றி
moment - திருப்பம்
momentum - உந்தம்
motherboard - தாய்ப்பலகை
motor - மின்னோடி
multimedia - பன்னூடகம்
multimeter - பன்னளவி
multiprocessor system - பல்செயலி முறைமை
multirate system - பல்வீத அமைப்பு - பல மாதியெடுப்பு வீதங்கள் கோண்ட அமப்பு; ஒரு மாதியெடுப்பு வீதத்திலுள்ள தரவு வேறொரு வீதத்தில் எதிர்ப்பார்க்கும் அமைப்பிற்கு அளிக்கும் போது, ஒரு பல்வீத அமைப்பு தேவைப்படுகிறது
multiswitch - பன்னிலைமாற்றி - ஒரு செயற்கைக்கோள் பெறு அமைப்பில் பல செயற்கைக்கோள் குறிகைகளை தனிமையோடு பல மேலமர்வுப் பெட்டிகளுக்கு தேர்வு செய்யும் சாதனம். இது கிண்ண அலைக்கம்பத்திற்கும் மேலமர்வுப் பெட்டி(களு)க்கிடையே அமைந்திருக்கும்
multistage amplifier - பலகூற்று மிகைப்பி 
nand gate - இல்-உம்மை வாயில்
navigational aid (=navaid) - வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி
near-field region - அருகுபுல மண்டலம்
network - பிணையம்
network analysis - பிணையப் பகுப்பாய்வு
neutron - நொதுமின்னி
nibble - நாலெண்
nickel - வன்வெள்ளி
no load charecteristic - சுமையில் சிறப்பியல்பு
no load current - சுமையிலோட்டம்
node - கணு
noise - இரைச்சல்
noise figure, noise factor - இரைச்சல் அளவெண், இரைச்சல் காரணி - ஒரு செயல்படு சாதனத்தின் வெப்ப இரைச்சல் அளிப்பு தனது வெளியீட்டில் குறிப்பிடும் அளவு; உண்மை மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல்/கருதியல் மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல் என்ற விகிதம், db அளவில்
noise resistance - இரைச்சல் மின்தடை
noise suppression - இரைச்சல் நீக்கம் 
objective lens - பொருள்நோக்கு வில்லை
observer - நோக்காளன்
oblique - சாய்வான
octet (= byte) - எண்ணெண்
omnidirectional antenna - சமதிசை அலைக்கம்பம் - எல்லா திசைகளிலும் சமமாக மின்காந்த ஆற்றலை கதிர்வீசும் கருதியல் அலைக்கம்பம்
open circuit - திறந்த மின்சுற்று, திறந்த மின்பாதை
open loop gain - திறந்த வளையப் பெருக்கம்
operating range - இயக்க நெடுக்கம்
operational amplifier (op-amp) - செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி)
or gate - அல்லது வாயில்
orbit - சுற்றுப்பாதை
orientation - திசையமைவு
oscillation - அலைவு
oscilloscope - அலை(வு)நோக்கி
overflow - வழிவு
overshoot - மேல்பாய்வு 
panaromic - அகலப் பரப்பு
parabolic reflector - பரவளைய எதிரொலிப்பி
parallax - இடமாறு தோற்றம்
parallel conncetion - பக்க இணைப்பு
parallellogram - இணைகரம்
para-magnet - இணைக்காந்தம்
parameter - கூறளவு
parasitic antenna - போலி அலைக்கம்பம்
parasitic capacitance - போலி மின்தேக்கம், போலி மின்கொண்மம்
parasitic inductance - போலி மின்தூண்டம்
parasitic impedence - போலி மின் மறுப்பு
parity bit - சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை, பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின், அவைகளை நீக்கவும் இயல்கின்றன
parity check - சமநிலை சரிபார்ப்பு
pass band - கடத்துப் பட்டை
passive load - உயிர்ப்பில் சுமை, உயிர்பற்றச் சுமை
patch cord - எளிதிணைப்பு வடம்
peer - ஒப்பி
peer-peer transfer - ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
pentode - ஐம்முனையம்
periodic table - தனிம அட்டவணை
peripheral component interconnect (pci) - புறக்கருவி இணைமுகம்
permeability - காந்த உட்புகு திறன்
permittivity - மின் தற்கோள் திறன்
permutation, permutation group - வரிசைமாற்றம், வரிசைமாற்றக் குலம்
phase (angular) - கட்டம்
phase (eg. 3-phase circuit) - தறுவாய்
phased array radar - கட்டஅணி கதிரலைக் கும்பா
phase locked loop (pll) - கட்டமடைவு வளையம்
phase shift keying (psk) - கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு அலைக்கட்டங்களாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
phosphorous - தீமுறி, பிரகாசிதம்
photon - ஒளித்துகள்
photosphere - ஒளிமண்டலம்
picture tube - படக் குழாய்
pick-up - அலையெடுப்பி
piezo-electric crystal - அமுக்கமின் பளிங்கு
place and route - இடவமைவு-திசைவு
placement - இடவமைவு
plane polarized wave - தள முனைவாக்கப்பட்ட அலை
plasma - மின்மம்
platinum - வெண்தங்கம்
plotter - வரைவி
plug - செருகி
plutonium - அயலாம்
pole (north/south) - முனை
pole (of a transfer function) - முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
polar axes - துருவ அச்சுக்கள், முனையச்சுக்கள்
polar coordinates - துருவ ஆயங்கள், முனை ஆயங்கள்
polarimeter - முனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்
polarity (positve/negative; north/south) - கதிர்வு
polarizer, polaroid - முனைவாக்கி - முனைவாக்கமற்ற ஒளி அல்லது மின்காந்த அலையை முனைவாக்கப்பட்ட ஒளி அல்லது மின்காந்த அலையாக மாற்றும் கண்ணாடி உட்பொருள்
power plane - திறன் தளம்
power spectrum - திறனிறமாலை
power spectral density - திறனிறமாலை அடர்வு - ஒரு குறிகையின் திறன் பரவல், அலைவெண்ணின் சார்பாக; இதன் மதிப்பு அக்குறிகையின் தன்னொட்டுறவின் ஃபுரியர் உருமாற்ற வீச்சளவின் இருபடியாகும் (square of magnitude of auto-correlation)
probe - தேட்டி
prism - அரியம், பட்டகம்
probability - நிகழ்தகவு
probability density function - நிகழ்தகவு அடர்சார்பு
programmer - நிரலி (device), நிரலர் (person)
programmable logic device - நிரல்படு தருக்கக் கருவி
propogation - பரப்புகை
proton - நேர்முன்னி
pulse amplifier - துடிப்பு மிகைப்பி
pulse code modulation - துடிப்பு சங்கேத பண்பேற்றம் - நிகழ்நேர (real-time) தரவுகளை இணைநிலை இலக்கமாக்கி (parallelized digital) செலுத்துதல்
pulse counter - துடிப்பு எண்ணி
pulse generator - துடிப்பாக்கி
pulse shaper - துடிப்பு உருமாற்றி
pulse transformer - துடிப்பு மின்மாற்றி
pump - எக்கி
pyramid - கூம்பகம் 
q (quality) factor - தரக் காரணி
quadrature phase shift keying (qpsk) - பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சு மற்றும் அலைக்கட்டம் சேர்வாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
quadrilateral - நாற்கரம்
quantization - சொட்டாக்கம் - தொடர்ச்சியுள்ள அளவுக் கணத்தை தனித்த அளவுக் கணமாக தோராயப்படுத்தி மாற்றுத்துதல்ல்; உதாரணமாக ஒரு ஒப்புமைக் குறிகையை ஒரு குறிப்பிட்ட படிநிலைகளில் இலக்கப்படுத்துதல்
quantization level - சொட்டாக்க படிநிலை
quantizer - சொட்டாக்கி
quantum - துளிமம்
quarter wave antenna - கால் அலைக்கம்பம்
quartz - பளிங்கு 
radar - கதிரலைக் கும்பா
radian - ஆரகம்
radiation pattern - கதிர்வீச்சு உருபடிவம்
radiator - கதிர்வீசி
radio activity - கதிரியக்கம்
radio beacon - வழிக்காணலை - விமானம் வழிகாணலுக்கான தரையமைந்த செலுத்தி எல்லா திசைகளிலும் கதிர்வீசும் வானலை
radio beacon (transmitter) - வழிகாணலை செலுத்தி
radio channel - வானலைத் அலைவரிசை
radium - கருகன் - உற்பத்தியாகுபோது வெள்ளி நிறமாகவும், காற்றில் பட்டதும் உடனே கருக்கும் கதிரியக்க உலோகம்
radius - ஆரம்
radon - ஆரகன்
random variable - சமவாய்ப்பு மாறி
rating - செயல்வரம்பு
reactance - எதிர்வினைப்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் எதிர்க்கும் தன்மை; மின்தூண்டியில் jwl மற்றும் மின்தேக்கியில் 1/jwc என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
reactive component - எதிர்வினை உறுப்பு
reciprocal, reciprocity - ஏற்றெதிர், ஏற்றெதிர்மை
reconfiguration - மீள்உள்ளமைவு
rectifier - (மின்)திருத்தி
receiver - பெறுவி
reflex klystron oscillator - எதிர்வினை மின் கற்றையலைவி/கற்றையலைப்பி
refract - திரிபுறு
refraction - ஒளித்திரிபு
refractive index - ஒளித்திரிபுக் கெழு
reflection (light, images) - எதிரொளி
reflection (electric signals) - எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
relative motion - சார்பியக்கம்
relativity theory - சார்பியல் கோட்பாடு
relay - அஞ்சல் சுருள்
reset - மீளமை, மீளமைவு
resistance - தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; r = v/i என்கிற மதிப்புடையது
resolution - பிரித்திறண்
resonance - ஒத்திசை
resonator - ஒத்திசைவி
retrace - மீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace), நெடு மீள்வரைவு (vertical retrace) என வகைப்படுகிறது
reverse bias - பின்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) குறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை நிறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் தடையம் ஏற்படும்
revolution - சுற்று
rf (radio frequency) - வானொலி அலை, வானலை
rf engineering - வானலையியல்
rf frequency - வானலைவெண்
rf ground - வானலை நிலம்
rheostat - தடைமாற்றி
rhombus - சாய்வுசதுரம்
ripple - குறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது, திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்
rise time - எழுநேரம்
rising edge - எழுவிளிம்பு
rotation - சுழற்சி
rotor - சுற்றகம்
sample - மாதிரி
sampling - மாதிரி எடுத்தல்
sampling rate, sampling frequency - மாதிரி வீதம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாதிரியெடுப்பின் எண்ணிக்கை
sampling theorem - மாதிரி எடுப்புத் தேற்றம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிகையின் (கருதியலான) இழப்பின்றி மறுமீட்பிற்கு குறைந்தபட்ச மாதிரி வீதம் அக்குறிகையின் அதிக அலைவெண்ணின் இருபடியாவது இருத்தல் வேண்டிய நிபந்தனை
sandpaper - மண்காகிதம்
saturation - தெவிட்டு நிலை
satellite - செயற்கைக் கோள்
scanner - வருடி
scattering parameters (s-parameters) - சிதறல் பண்பளவுகள் - ஒரு பலதுறை பிணையத்திற்கு (multi-port network) வழங்கும் அளிப்பு திறனின் எதிரொளிப்பு/பரப்புகை பண்புகளை (reflected/transmission charecteristics of power applied) விவரிக்கும் பண்பளவுகள்; இது அணியாக (matrix) வகைக்குறிக்கப்படுகிறது
scrambling - கலரீடு
sensor - உணரி
serdes - இயைப்பி
series connection - தொடர்நிலை இணைப்பு
server - வழங்கி
set - கணம்
set top box - மேலமர்வுப் பெட்டி - மறையிடப்பட்ட வடம் அல்லது செயற்கைக்கோள் குறிகைகளை தொலைக்காட்சியில் பெற இயலும் சாதனம்
short circuit - குறுக்கு மின்பாதை, குறுக்கிணைப்பு
short circuit (fault, accident) - மின்கசிவு
shot noise - மாது இரைச்சல் - ஒரு முடிவுறு எண்ணிக்கை துகள், எ.டு. கடத்திகளில் மின்னிகள், அல்லது ஒளியின் துளிமங்கள் ஆற்றலை ஏற்றிச்செல்லும்போது ஏற்படும் இரைச்சல்; இது அளவையில் புள்ளியியல் ஏற்றிறக்கங்களை அளிக்கிறது.
side band - பக்கப்பட்டை - ஒரு சுமைப்பி குறிகையின் பண்பேற்றத்தால் சுமைப்பியின் அலைவெண்ணிற்கு இருபுறமும் உருவாகும் அலைவெண் பட்டைகள்--இவைகளில் ஒன்று
signal - குறிகை
signal integrity - குறிகை மெய்மை
silicon - மண்ணியம்
simulation - பாவனை
simulator - பாவிப்பி
single phase - ஒற்றைத் தறுவாய்
single side band (ssb) modulation - ஒருபக்கப்பட்டைப் பண்பேற்றம் - வீச்சுப் பண்பேற்றத்தில் இரண்டில் ஒரு பக்கப்பட்டை நீக்கப்பட்ட வீச்சு பண்பேற்றம்; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
single-stub (impedence) matching - ஒருமுளை (மின் மறுப்பு) பொறுத்தம்
skew - இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு
skin effect - பரிதி விளைவு - உயர் மாறுதிசை அலைவெண்களில், மின்னோட்டம் ஒரு கடத்தியின் மேல்பரப்பில் மட்டும் கட்டுப்படுதல்
skyscraper - வானளாவி
skywave - விண்ணலை
socket - பொறுந்துவாய்
sodium - உவர்மம்
solid angle - திண்மக் கோணம்
solder flux - சூட்டிணை மெழுகு
solder iron - சூட்டிணைக் கோல்
solder lead - சூட்டிணை உருகுகம்பி
sonar - ஊடொலிக் கும்பா
sound card - ஒலி அட்டை
source code - மூலக் குறியீடு
speaker - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
spectrometer - நிறமாலைமானி
spectrum analyzer - நிறமாலைப் பகுப்பி
sphere - கோளம்
spread spectrum - பரவல் நிறமாலை
spreadsheet - விரிவுத்தாள்
stability - நிலைப்புத்தன்மை
stability condition - நிலைப்பு நிபந்தனை - ஒரு முறைமையின் நிலைப்பை உறுதிபடுத்த அதன் மாற்றுச்சார்பின் கதிர்களின் (poles) இருப்பிடத்தை (குறிப்பாக s-தளத்தின் வலது பாதியில் அமைவது) நிர்ணயிக்கும் நிபந்தனை
standing wave - நிலையலை
standing wave ratio (swr) - நிலையலை (மின்னழுத்த) விகிதம்; காண்க voltage standing wave ratio
static electricity - நிலைமின்சாரம் - ஒரு மின்காக்கும் பொருளில் சேரக்ரிக்கப்படும் மின்னூட்டம்
stop band - தடைப் பட்டை
strain - திரிபு, விகாரம்
stream (of bits, data etc.) - தாரை
stress - தகைவு
stripline - கீற்றுத்தடம் - மின்சுற்றுப் பலகைகளில் உள்ளடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள்
stub - முளை - ஒரு குறிப்பிட்ட நீளத்திலுள்ள திறந்த அல்லது குறுக்கிணைந்த (short-circuited) பரப்புத் தடம்
subsystem - துணைமுறைமை, துணையமைப்பு
superposition theorem - மேல்படி தேற்றம் - ஒரு நேரியல் அமைப்பில் பல உள்ளீடுகளின் உடன்பாடாக ஏற்படும் வெளியீடு, அவைகளின் தனித்தனியாக ஏற்படும் வெளியீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம்
supply voltage - வழங்கல் மின்னழுத்தம்
surge - எழுச்சி
surface mount component - மேல்பரப்பு உறுப்பு - மின்சுற்றுப் பலகைகளில் மேல்புறத்தில் பிணைக்கப்பட்ட உறுப்பு
susceptance - ஏற்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மின்தூண்டியில் 1/jwl மற்றும் மின்தேக்கியில் jwc என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
switch, switching - நிலைமாற்றி, நிலைமாற்றம்
switcher, switching regulator - நிலைமாற்றுச் சீர்ப்படுத்தி
synchronization - ஒத்தியக்கம்
synch charecter - இசைவு உரு - ஒரு அமைப்பு மற்றொன்றுடன் ஒத்தியங்க செலுத்தப்படும் (இணை அல்லது தொடர்வரிசை) தரவு உருபடிவம் (data pattern)
synchronous - ஒத்தியங்கு
synthesis - இணைபடுத்தல்
synthesizer - இணைபடுத்தி 
tachometer - சுழற்சிமானி, சுழற்சி அளவி
tangent - தொடுகோடு
tank circuit - தொட்டிச் சுற்று
tantallum - இஞ்சாயம்
tape recorder - நாடாப் பதிவி
target (in a bus etc.) - இலக்கு
telescope - தொலைநோக்கி
tension - இழுவிசை
terminate (transmission lines) - முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல்
termination resistor, termination resistance - முடிப்பு மின்தடை, முடிப்பு மின்தடையம் - எதிரலைகள் ஏற்படுதலை தடுக்க மின் தடங்களின் சேர்க்கப்படும் அல்லது தற்செயலாக திகழும் மின்தடையம்
terrestrial, terrestrially - புவிப்பரவு, புவிப்பரவாக
test bench - சோதனை மேடை
tetrode - நான்முனையம்
thermistor - வெப்பத்தடையம்
thermal noise - வெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல்
thermocouple - வெப்ப இரட்டை
thermodynamics - வெப்ப இயக்கியல்
thick film - தடிபடலம்
thick lens - தடிவில்லை
thin film - மென்படலம்
thin lens - மென்வில்லை
thorium - இடியம்
through-hole component - துளைப்புகு உறுப்பு - மின் சுற்றுப்ப்லகைகளில் துளை வழிமங்கள் (through-hole vias) மூலம் பிணைக்கப்பட்ட உறுப்புக்கள்
through-hole via - துளை வழிமம் - ஒரு சுற்றுப்பலகையின் இரு முகங்களையும் எட்டும் வழிமம்
throughput - செய்வீதம்
thyratron - வளிமும்முனையம்
timebase - காலவடி
titanium - வெண்வெள்ளி
tone - தொனி
toroid(al coil) - நங்கூரச்சுருள்
transponder - செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன
transfer function - மாற்றச் சார்பு
transform - உருமாற்று, உருமாற்றம்
transceiver - செலுத்துப்பெறுவி
transient - மாறுநிலை
transmission line - பரப்புத் தடம், செலுத்துத் தடம்
transmitter - செலுத்தி
travelling wave tube (twt) - இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
triac (triode for ac) - மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (scr) சமம்
triode - மும்முனையம்
trigger(ing) - குதிரை(யிடல்)
trippler - மும்மடங்காக்கி
troposhere - அடிவளிமண்டலம்
truth table - மெய் அட்டவணை
tuner - இசைப்பி
tuned - ஒத்தியைந்த, சுரம்கூட்டிய
tuned amplifier - இசைப்புறு மிகைப்பி
tunnel diode - சுரங் இருமுனையம், சுரங்கி
tungsten - மெல்லிழையம்
turbine - சுழலி
tweeter - மேல்சுர ஒலிபெருக்கி
twinax cable - ஈரச்சு வடம் 
ultraviolet - புறஊதா
ultra high frequency (uhf) - அதிஉயர் அலைவெண்
ultrasonic - கேளாஒலி
ultrasound - ஊடொலி
underflow - குறைப்பாய்வு
undershoot - கீழ்பாய்வு
uniform quantization - சீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை
uranium - அடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது 
vanadium - பழீயம்
variance - மாறுபாட்டெண்
vector quantization - நெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை
velocity - திசைவேகம்
vertically polarized wave - செங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
vestigial side-band modulation - எச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
via - வழிமம் - ஒரு பன்னடுக்கு மின் சுற்றுப்பலகையில், மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்கிற்கு கடப்பதற்கு அமைக்கபடும் சிறுதுளை
video - ஒளிதோற்றம்
video recorder - ஒளிதோற்றப் பதிவி
voltage regulator - மின்னழுத்தச் சீர்ப்பி
voltage stabilizer - மின்னழுத்த நிலைப்பி
voltage standing wave ratio (vswr) - நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம்
wafer - சீவல்
wave front - அலை முகப்பு
wave propagation- அலைப் பரவுதல்
waveguide - அலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி
waveform - அலைவடிவம், அலைப்படம்
waypoint - பாதைப்புள்ளி - கடல், தரை அல்லது வான வழிக்காட்டலுக்கு மேற்கோள்ளாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட புவி இருப்பிடம்; இது உலக இடம் காட்டும் அமைப்பில் (gps) பயனாகிறது
weather radar - வானிலை கதிரலைக் கும்பா
white noise - வெண்ணிறைச்சல்
wireless fidelity (wi-fi) - கம்பியில்லா மெய்நிலை
woofer - அடிச்சுர ஒலிபெருக்கி
word - ஈரெண்ணெண்
double-byte - ஈரெண்ணெண்
x-ray - ஊடுக்கதிர்
yoke - நுகம்
zero (of a transfer function) - சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்
